உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இடைநிலை ஆசிரியர்கள் 200  பேர் கைது

இடைநிலை ஆசிரியர்கள் 200  பேர் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 200 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி தலைமை வகித்தார். தலைவர் தினேஷ்குமார், பொருளாளர் வினோத்பாபு முன்னிலை வகித்தனர்.தமிழகத்தில் 20 ஆயிரம் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். முற்றுகைப் போராட்டம் செய்த ஆசிரியர்களை கைது செய்ததை கண்டித்தனர். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். அப்போது 200 ஆசிரியர்களைபோலீசார் கைது செய்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை