உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கைக்கு கடத்த பதுக்கி இருந்த 250 கிலோ கடல் அட்டை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த பதுக்கி இருந்த 250 கிலோ கடல் அட்டை பறிமுதல்

தேவிபட்டினம்:இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே ஆற்றங்கரை கடல் வழியாக கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்த இருப்பதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தேவிபட்டினம் மரைன் போலீஸ் எஸ்.ஐ., முகமது தாரிக்குல் அமீன் மற்றும் போலீசார் ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தோப்பில் கடல் அட்டைகளை அவித்து பதப்படுத்தி காயவைத்து பேக்கிங் செய்வது தெரிய வந்தது. அங்கு ஜாகுர்தீன் 46, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 சாக்கு மூடைகளில் 250 கிலோ காய்ந்த கடல் அட்டைகளையும், டூவீலரையும் பறிமுதல் செய்தனர். கடல் அட்டைகளை ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.ஆற்றங்கரை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்துவதற்கு திட்டமிட்டு இருந்ததும், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு ரூ.25 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி