| ADDED : டிச 10, 2025 08:07 AM
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடத்தப்பட்ட 2500 கிலோ ரேஷன் அரிசி, 300 இலவச வேட்டி, சேலைகளை பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர். சாயல்குடியில் ராமநாதபுரம் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சாயல்குடி வழியாக சென்ற மினி சரக்கு லாரியை சோதனையிட்டனர். அதில் 50 மூடைகளில் தலா 50 கிலோ ரேஷன் பருப்பு மூடைகள் இருந்தன. 300 இலவச வேட்டி சேலைகள் பார்சல்களாக கட்டப்பட்டிருந்தன. மினி சரக்கு லாரியை பறிமுதல் செய்து ரேஷன் பருப்பு மற்றும் அரசின் இலவச வேட்டி சேலைகளை கடத்திய சாயல்குடியைச் சேர்ந்த சதீஷ் 48, விருதுநகரைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் செபாஸ்டின் 52, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். எங்கிருந்து இவற்றை கடத்தப்பட்டு, எங்கு கொண்டு செல்லப்பட்டது என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.