உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரெகுநாதபுரம் பஸ்ஸ்டாப் பகுதியில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

ரெகுநாதபுரம் பஸ்ஸ்டாப் பகுதியில் ரகளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதி மற்றும் பெரியபட்டினம் - ராம நாதபுரம் பிரதான சாலையில் நேற்று முன்தினம் மாலை மது போதையில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ரெகுநாதபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று முன்தினம் அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரை தகாத வார்த்தைகளால் திட்டியும் ஆயுதங்களை காட்டி மிரட்டியும் அவ்வழியாக சென்ற வாகன டிரைவர்களை அச்சுறுத்தியும் கையில் ஆயுதங்களுடன் ரவுடியிசம் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து திருப்புல்லாணி போலீசார் விசாரணையில் தகராறில் ஈடுபட்ட ரெகுநாதபுரம் மேலவலசையை சேர்ந்த அன்பு மணிகண்டன் 25, பிரதீப் 25, குருமூர்த்தி 25, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் முரளி 29, பாலாஜி 24, இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். வாலிபர்கள் தாக்கியதில் இரண்டு பேர் காயமடைந்தனர். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி