உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 14,843 மனுக்களில் 3441க்கு தீர்வு 

 மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 14,843 மனுக்களில் 3441க்கு தீர்வு 

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட 14 ஆயிரத்து 843 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3441 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 111 வார்டுகள், 7 பேரூராட்சிகளில் 2023 டிச.18 முதல் 2024 ஜன.11 வரை 14 ஆயிரத்து 843 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மக்களுடன் முதல்வரின் திட்ட மனுக்கள் 3899ல் 3441க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 458 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளன. ஊராட்சிப்பகுதிகளிலும் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை விரிவுபடுத்தபடவுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி