உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாப பலி

 மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாப பலி

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி தி.மு.க., துணைத்தலைவர் அழகுராணியின் கணவர் ராஜேந்திரன் 52, தி.மு.க., பிரமுகர். புதுக்குடியில் உள்ள இவர்களுக்கு சொந்தமான வீட்டை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வீடு காம்பவுண்ட் சுவர் கம்பி கதவை ராஜேந்திரன் திறந்த போது மின்சாரம் பாய்ந்து இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம் போடி போஜப்பன் நகர் தேவர் காலனி ஜெயபாண்டி 44, தனியார் வங்கி ஊழியர். இவரது வீடு அருகே வீடு கட்டி நேற்று புதுமனை புகுவிழா நடந்தது. புதுக்காலனி பால் வியாபாரி ராமையா 60, தன் பசுவை ஜெயபாண்டியின் வீடு கிரகபிரவேசத்துக்காக அழைத்துச் சென்றார். பசுவை வீட்டிற்குள் அழைத்துச் சென்று விட்டு வந்த போது மழையால் பசு மிரண்டு ஓடியது. அதை பிடிக்க முயன்ற ராமையா நிலை தடுமாறி அருகே இருந்த காம்பவுண்ட் சுவரில் இருந்த மின் மீட்டர் பெட்டியில் கையை வைத்த போது மின்சாரம் தாக்கி மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்ததாக டாக்டர் தெரிவித்தார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்துார் அ.ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் சக்திவேல் 33, மகன் வினோத்குமார் 6ம் வகுப்பு மாணவர். நேற்று முன்தினம் மாலை 5:15 மணிக்கு வினோத்குமார், நண்பர்கள் ஜெகன், கவினுடன் விளையாட சென்றார். அப்பகுதியில் குவிக்கப்பட்ட மணலில் ஏறி பழைய கழிப்பறை சுவர் மீது அமர்ந்து விளையாடினார். கீழே நின்ற ஜெகன், வினோத்குமாரை கீழே இறங்கி வரும்படி கூறவே சுவரில் எழுந்து நின்ற வினோத் குமார், கையை உயர்த்தி மணலில் குதிக்க முயன்ற போது மேலே சென்ற உயரழுத்த மின்சார கம்பியில் கை உரசியதில் மின்சாரம் பாய்ந்து கீழே வாறுகாலில் விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சாத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இறந்தார். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இலங்கை அகதி பலி திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் ஜேசு ராஜன் குரூஸ் 34. நண்பர் ரெனால்ட் 35. இருவரும் நேற்று முன்தினம் காலை கோபாலசமுத்திரத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துார் மொட்டைமலை அகதிகள் முகாமில் உள்ள ரெனால்டின் அத்தை வீட்டிற்கு வந்தனர். அங்கு வீட்டின் கூரை செட்டை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 12:30 மணிக்கு ஒயர் இணைப்பை கழற்றாமல் சுவிட்ச் பாக்சை தூக்கிய போது மின்சாரம் தாக்கி ஜேசுராஜன் குரூஸ் இறந்தார். வன்னியம்பட்டி போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை