உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் பணி 400 பேர் நியமனம்; கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்படும்

லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில் பணி 400 பேர் நியமனம்; கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்படும்

ராமநாதபுரம் : - ராமநாதபுரம் லோக்பா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள், பணியாளர்கள் என 400 பேர் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கட்சி முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்களின் சீல் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின் படி ஜூன் 4ல் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஓட்டு எண்ணிக்கை துவங்கும் முன் முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்களில் உள்ள சீல்அகற்றப்பட்டு பணிகளை துவங்க வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் இயக்கப்பணி குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டால் உடனடியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பெல் நிறுவன பொறியாளர்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து பணிகளை தொடர வேண்டும்.அப்போது முகவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்துவதுடன் எந்த இடையூறுகளுக்கும் ஆளாகாத வண்ணம் கவனமாக பணிகளை மேற்கொண்டு ஒவ்வொரு சுற்றின் முடிவுகளை உறுதி செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அனுமதியுடன் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.ஓட்டுஎண்ணிக்கை பணி மேற்கொள்ள மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என 400 பேர் இப்பணியில் ஈடுபடுவார்கள். எனவே ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் முடியும் வரை கவனமாக பணிபுரிய வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இளங்கோவன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை