மேலும் செய்திகள்
சில வரிகள்
29-Nov-2024
திருவாடானை: மின் இணைப்புகளில் முறைகேடு நடந்ததால் ஐந்து மின் இணைப்புகள் துண்டிக்கபட்டுள்ளன.ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் திலகவதி உத்தரவின் படி, திருவாடானை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி, கணக்கீட்டு அலுவலர் மோகன் மற்றும் அலுவலர்கள் திருவாடானை கோட்ட அளவிலான கூட்டு ஆய்வு செய்தனர். வீடு, கடை, கட்டுமான மின் இணைப்புகளில் 12 பொறியாளர்கள், 765 மின் இணைப்புகளில் ஆய்வு செய்தனர். இதில் ஐந்து மின் இணைப்புகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ரூ. 61 ஆயிரத்து 004 இழப்பீட்டு தொகை கணக்கிடப்பட்டு, ரூ.19 ஆயிரத்து 965 வசூல் செய்யபட்டது. அந்த மின் இணைப்புகளை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
29-Nov-2024