மேலும் செய்திகள்
மின்னல் தாக்கி 8 வெள்ளாடு பலி
28-Apr-2025
நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
06-Apr-2025
கமுதி: கமுதி அருகே கோட்டையூர் கிராமத்தில் கண்மாய் அருகே மின்னல் தாக்கி 5 ஆடுகள் இறந்தன. உரிமையாளர் கருணாமூர்த்தி காயமடைந்தார்.கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது இடியுடன் மழை பெய்து வருகிறது.நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. கமுதி அருகே கோட்டையூர் கிராமத்தில் மழை பெய்தது. அப்போது கண்மாய் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த மல்லம்பட்டியை சேர்ந்த கருணாமூர்த்தி ஆடுகளுடன் மரத்தடியில் ஒதுங்கி இருந்தார்.அப்போது மின்னல் தாக்கியதில் 5 ஆடுகள் இறந்தன. கருணாமூர்த்தி பலத்த காயமடைந்து அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Apr-2025
06-Apr-2025