உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திறனாய்வு தேர்வில் 5 மாணவர்கள் தேர்வு  

திறனாய்வு தேர்வில் 5 மாணவர்கள் தேர்வு  

திருவாடானை: திருவாடானை, தொண்டி அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 5 பேர் ஊரக திறனாய்வு தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது. இத்தேர்வில் திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளி, தொண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னக்கீரமங்கலம், பாண்டுகுடி, மங்களக்குடி, தினைக்காத்தான்வயல், தளிர்மருங்கூர், ஓரியூர், வட்டாணம், சோழகன்பேட்டை, எஸ்.பி.பட்டினம், நம்புதாளை உட்பட 38 பள்ளிகளில் படிக்கும் 488 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ.48 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும். இத்தேர்வில் காடாங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் படித்த சஞ்சனா, தீலீபன், குருமிலாங்குடி ஷாலினி, கொடிப்பங்கு செங்கதிர்செல்வன், பழங்குளம் சுவாதி ஆகிய 5 பேர் தேர்வில் வெற்றிபெற்றனர்.அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட அரசு தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ்ஆரோக்கியராஜ், திருவாடானை வட்டார கல்வி அலுவலர் புல்லானி சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ