உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  படிவம் 6 பெற்ற 706 புதிய வாக்காளர்கள் ஜன.18 வரை அவகாசம் உள்ளது

 படிவம் 6 பெற்ற 706 புதிய வாக்காளர்கள் ஜன.18 வரை அவகாசம் உள்ளது

பரமக்குடி: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நிறைவு பெற்று வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சிறப்பு வாக்காளர் முகாம் நடந்ததில் பரமக்குடி (தனி) தொகுதியில் 706 புதிய வாக்காளர்கள் சேர்வதற்கு படிவம் பெற்றுள்ளனர். பரமக்குடி(தனி) சட்ட சபை தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 350 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நிறைவடைந்து 30,113 பேர் நீக்கப்பட்டு 2 லட்சத்து 27 ஆயிரத்து 237 பேர் உள்ளனர். தொடர்ந்து டிச., 21ல் நடந்த சிறப்பு வாக்காளர் முகாமில் 706 புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு படிவம் 6 பெற்று உள்ளனர். இதே போல் இறந்து போன வாக்காளர்களை நீக்கம் செய்ய படிவம் 7ஐ 16 பேரும் மற்றும் பெயர் அல்லது முகவரி திருத்தம் செய்ய படிவம் 6 ஐ 92 பேர் பெற்றுள்ளனர். முகாமில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் தவறுதலாக நீக்கம் செய்த பெயர் சேர்க்கவோ அல்லது தவறுதலாக சேர்க்கப்பட்ட பெயரை நீக்கவும், உறுதிமொழி பத் திரம் எந்த கட்சி பிரதி நிதிகள் இடமிருந்தும் பெறப்படவில்லை. மேலும் படிவங்கள் பெற, பெயர் சேர்க்கை மற்றும் நீக்கல் செய்ய 2026 ஜன., 18 வரை அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. இப்பணிகள் பிப்., 10ல் முடிவு பெற உள்ளது. இதற்காக 4 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ள நிலையில், பெறப்படும் படிவங்களை விசாரிக்க கூடுதலாக 6 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 17ல் வெளியிடப்பட உள்ளது என ஆர்.டி.ஓ., சரவண பெருமாள் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை