சிறுதானிய பதப்படுத்தும் இயந்திரம் அமைப்பதற்கு 75 சதவீதம் மானியம்
பரமக்குடி : தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தில் சிறு தானிய முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்களை நிறுவ 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற வேண்டுமென கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்தார். பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் மானிய திட்டத்தில் செயல்படும் சிறு தானிய முதன்மை பதப்படுத்தும் திட்டத்தை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார். அப்போது வேளாண் தொழில் முனைவோர் குமார், ரூ. 21.50 லட்சம் மதிப்பில் 9 வகையான இயந்திரங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார். இதன் மூலம் சிறு தானியம் சுத்தம் செய்தல், கல் மற்றும் துாசி நீக்குதல், தோல் நீக்குதல், மாவு அரைத்தல் தானியத்தை நிறம் பார்த்து பிரிக்கும் இயந்திரம், தானிய மெருகூட்டுதல், சிப்பமிடுதல், எடையிடும் மற்றும் முத்திரையிடும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. உடன் வேளாண் துறை இணை இயக்குனர் பாஸ்கரமணியன், விற்பனை மற்றும் வணிகத்துறை செயலாளர் கோபாலகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாசுகி, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் விவசாய உறுப்பினர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.