வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மீன்களுக்கு நல்லது
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினரின் கெடுபிடியால் ராமேஸ்வரம் பகுதியில் 90 சதவீதம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூன் 15 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையின் கெடுபிடியால் தொடர்ந்து தொழில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் மீனவர்கள் பலர் கைதாகி சிறையில் உள்ளனர். இப்பிரச்னையால் வாழ்வாதாரம் பாதித்த ராமேஸ்வரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களில் 90 சதவீதம் பேர் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் 80 படகுகளை தவிர மீதமுள்ள 850 விசைப் படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டன.
மீன்களுக்கு நல்லது