உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை டூ தனுஷ்கோடி நீந்தி கடக்க மாற்றுத்திறனாளி சிறுவன் பயணம்

இலங்கை டூ தனுஷ்கோடி நீந்தி கடக்க மாற்றுத்திறனாளி சிறுவன் பயணம்

ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடக்க மாற்றுதிறனாளி சிறுவன் புவி ஆற்றல் 12, நேற்று படகில் இலங்கை சென்றார். சென்னையை சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவரது மகன் புவிஆற்றல் 12, மாற்றுத்திறனாளி. இவருக்கு வலது கால் 60 சதவீதம் இயல்பாக நடக்க முடியாது. இவர் சென்னை அகடாமியில் நீச்சல் பயிற்சி பெற்றார். 2024ல் கோவாவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி பதக்கம் வென்றார். தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெற்ற சிறுவன் சவாலான பாக்ஜலசந்தி கடலில் இலங்கை டூ தனுஷ்கோடி வரை நீந்தி கடக்க முடிவு செய்தார். அதன்படி ராமேஸ்வரத்தில் சுங்கத்துறை, உளவுத்துறை போலீசார் சோதனைக்கு பிறகு நேற்று மதியம் ஒரு விசைப்படகில் சிறுவன் புவிஆற்றல், நீச்சல் பயிற்சியாளர், உறவினர்களுடன் புறப்பட்டு இலங்கை தலைமன்னார் சென்றார். இன்று அதிகாலை (நள்ளிரவு 1 மணி) சிறுவன் கடலில் நீந்தியபடி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வர உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ