பரமக்குடி அனுமார் கோயில் அருகில் காய்ந்து போன மரம்
அகற்ற பக்தர்கள் கோரிக்கைபரமக்குடி: பரமக்குடி நகராட்சி எதிரில் அனுமார் கோயில் அருகில் பல மாதங்களாக காய்ந்து போன மரத்தை ஆபத்து ஏற்படும் முன் அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.பரமக்குடி நகராட்சி அருகில் அனுமார் கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது.கோயிலுக்கு தினமும் பல நுாறு பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மதியம் அன்னதானத் திட்டம் செயல்படுகிறது. இக்கோயிலுக்கு வடக்கு பகுதியில் வைகுண்ட வாசல் இருக்கிறது. இங்கு வேப்பமரம் பட்டுப்போன நிலையில் பல மாதங்களாக உள்ளது. தொடர்ந்து காற்று, மழையால் மரத்தின் கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுகிறது. இதனால் நகராட்சி அலுவலகம் வருவோர் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆபத்தான நிலையில் அப்பகுதியை கடக்கின்றனர். தற்போது கோயில் திருப்பணி வேலைகள் நடக்கிறது. மரம் முறிந்து விழும் நிலையில் கோபுரத்திற்கு சேதம் ஏற்படும். ஆகவே பட்டுப்போன மரத்தை உடனடியாக அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.