மேலும் செய்திகள்
கண்ணபுரத்தில் மகாகணபதி கோயில் கும்பாபிஷேக விழா
4 hour(s) ago
திருப்புல்லாணியில் உழவாரப்பணி
4 hour(s) ago
ஒடிசா ரயிலில் புகையிலை பறிமுதல்
4 hour(s) ago
மழை, மின்னலின் போது அலைபேசி தவிர்க்க அறிவுரை
4 hour(s) ago
சாயல்குடி,:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஓட்டலில் பரோட்டா தீர்ந்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் உரிமையாளரை சரமாரியாகத் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த வீடியோ பரவுகிறது.சிக்கல் அருகே தொட்டியபட்டியை சேர்ந்த அப்துல் லத்தீப் 45. சாயல்குடியில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஜன.21 இரவு 10:30 மணிக்கு ஓட்டலில் வியாபாரம் முடித்துவிட்டு கடையை அடைக்க முயன்றார்.அப்போது அங்கு வந்த 25 முதல் 28 வயதுள்ள நான்கு வாலிபர்கள் பரோட்டா கேட்டனர். அப்துல் லத்தீப் தீர்ந்து விட்டது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் ஓட்டலுக்குள் புகுந்து கல்லாப்பெட்டியை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தினர்.தடுத்த அப்துல் லத்தீப்பை தாக்கி கீழே தள்ளி அடித்து உதைத்தனர். தண்ணீர் டிரம்மிற்கள் தலையை அழுத்தினர். அப்துல் லத்தீப் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளார். அதன் பிறகு நால்வரும் சென்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல் லத்தீப் சாயல்குடி போலீசில் புகார் அளித்தார்.ஓட்டல் உரிமையாளர் தாக்கப்பட்ட சி.சி.டி.வி., காட்சி வீடியோ பரவியது. இருந்த போதும் போலீசார் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. உரிமையாளர்கள் அச்சப்பட்டு புகார் அளிக்க தயங்குகின்றனர்.எனவே இரவு நேர ரோந்து பணியை போலீசார் மேற்கொள்ளவும் வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் எஸ்.பி., சந்தீப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago