உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆதார் மையம் கூடுதல் கவுன்டருக்கு கோரிக்கை

ஆதார் மையம் கூடுதல் கவுன்டருக்கு கோரிக்கை

திருவாடானை: ஆதார் புதுப்பிக்க கூட்டம் அதிகமாக கூடுவதால் கூடுதல் கவுன்டர்கள் துவக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆதார் அட்டை புதுப்பித்தல், புதிதாக எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். பள்ளிகளில் சேரும் குழந்தைகளில் ஐந்து வயதுக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் புதுப்பிக்க வேண்டும்.அதே போன்று பள்ளி படிப்பு முடிந்து கல்லுாரி செல்வோரும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் ஆதார் புதுப்பிக்க வேண்டும். ஆதார் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆதார் மையத்தையே பொதுமக்கள் நாடி வருகின்றனர்.திருவாடானை தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் ஆதார் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளின் ஆதார் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால் தினமும் ஏராளமானோர் கூடுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் கவுன்டர்கள் துவங்கவும், ஆட்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை