உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் நாளை ஆதார் சிறப்பு முகாம்

பரமக்குடியில் நாளை ஆதார் சிறப்பு முகாம்

பரமக்குடி: -பரமக்குடி ஆற்றுப்பாலம் அருகில் இயங்கி வரும் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை குறித்த சிறப்பு முகாம் நடக்கிறது.இதன்படி நாளை (பிப்.11) காலை 8:30 முதல் மாலை 6:00 மணி வரை அனைத்து பொதுமக்களும் பயன்பெறலாம். இதில் புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம், பிறந்த தேதி, அலைபேசி எண், முகவரி திருத்தம் செய்து கொள்ள முடியும். மேலும் 5 மற்றும் 10 ஆண்டிற்கு மேல் உள்ள ஆதாரை புதுப்பித்து கொள்ளலாம்.பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கு குறிப்பிட்ட வயதினருக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.50 மற்றும் 100 என கட்டணம் செலுத்தும் வகையிலும் இருக்கும், என தலைமை அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை