சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று காலை காப்பு கட்டப்பட்டது. பின்னர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அங்கு வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கருடாழ்வார் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் வீதிவலம் வந்தார். ஆக.,4 பெரிய திருவடியான கருட வாகனத்தில் அருள் பாலிப்பார். ஆக.,6 இரவு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக.,8 காலை நவநீதகிருஷ்ணன் சேவை, இரவு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் பெருமாள் அருள்பாலிப்பார். ஆக.,9 காலை 10:35 மணிக்கு ஆடி தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது. ஆக.,10 காலை தீர்த்தவாரி உற்ஸவம், இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான மேனேஜிங்டிரஸ்டி ரெங்காச்சாரி தலைமையிலான டிரஸ்டிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.