உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆட்டோ, டூவீலர்கள் இயக்கும் சிறுவர்களால் விபத்து அபாயம்

ஆட்டோ, டூவீலர்கள் இயக்கும் சிறுவர்களால் விபத்து அபாயம்

கீழக்கரை: கீழக்கரை நகர் பகுதிகளில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் சிலர் டூவீலர்கள், ஆட்டோ ஓட்டும் செயல் அரங்கேறி வருகிறது. விபத்திற்கு முன்னதாக போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில்லாத போக்குவரத்து விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்படும் வேளையில், கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 18 வயதிற்கு குறைவான சிலர் ஆட்டோவை இயக்குகின்றனர். டூவீலர்களில் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போலீசார், போக்குவரத்து துறையினர் உரிய முறையில் கண்காணித்து தடையை மீறி ஆட்டோ, டூவீலர்களை இயக்கும் சிறுவர்களை கண்டித்து, அபராதம் விதிக்கவும், லைசன்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை