விபத்தில் காயம் அடைந்தவர் பலி
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடவயலை சேர்ந்தவர் சிவசரவணன் 40. இவர் ஜன.2ல் சோழந்துார் சென்று விட்டு தனது ஊருக்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் நோக்கிச் சென்ற டூவீலர் சிவசரவணன் மீது மோதியதில் சிவசரவணன் படுகாயம் அடைந்தார்.அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பலியானார். புகாரில் டூவீலரை ஓட்டி வந்த புதுவலசை ஜாகிர் உசேன் 45, மீது திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.