உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் ஏர்வாடி தர்கா பஸ் நிறுத்த கூடுதல் இடம் தேவை

ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் ஏர்வாடி தர்கா பஸ் நிறுத்த கூடுதல் இடம் தேவை

கீழக்கரை; ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் ஏர்வாடி தர்கா செல்வதற்கு கூடுதல் எண்ணிக்கையில் பஸ் நிறுத்துவதற்கான ரேக்குகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்வதற்கான இருப்பிட ரேக்குகளில் கீழக்கரைக்கு அடுத்தபடியாக ஏர்வாடி தர்காவிற்கு ஒன்று மட்டுமே உள்ளது. ஏர்வாடியை சேர்ந்த தன்னார்வலர்கள் கூறியதாவது: ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக ஏர்வாடி தர்கா திகழ்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய அரசு பஸ்கள் நாள் ஒன்றுக்கு 50க்கும் அதிகமாக வருகின்றன. இந்நிலையில் தற்போது புதியதாக திறக்கப்பட உள்ள ராமநாதபுரம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வந்து நின்று செல்லும் ரேக்குகளில் ஒன்று மட்டுமே உள்ளது. எனவே ஐந்திற்கும் மேற்பட்ட கூடுதல் ரேக்குகளை அமைத்தால் பஸ்கள் வந்து செல்வதற்கு பயனுள்ளதாக அமையும். எனவே விஷயத்தில் நகராட்சி நிர்வாகத்துடன் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒன்றிணைந்து பஸ்கள் நிறுத்துமிட ரேக்குகள் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை