உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயில் தவில், நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

ராமேஸ்வரம் கோயில் தவில், நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படவுள்ள தவில், நாதஸ்வரப் பயிற்சிப்பள்ளியில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. தவில், நாதஸ்வரப் பள்ளியில் 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிப் பள்ளியில் சேர 8ம் வகுப்புத் தேர்ச்சி கல்வித் தகுதிக் கொண்ட ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் தகுதியுடையோர் ஆவர். 13 வயது முதல் 20 வயதுடையோர் இப்பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இருபாலரும் இப்பயிற்சிப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிப் பெறும் மாணவர்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். மேலும் பயிற்சி காலத்தில் தங்கும் இடம், உணவு, உடை, பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் மருத்துவ வசதி ஆகியவை கட்டணமின்றி வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் கோயில் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களை jceorameshwaram_35671.tn.gov.inகோயில் மின்னஞ்சல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என இணை ஆணையர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை