உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்துவிட்டு நல வாரியத்தை அமல்படுத்தக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்க மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் கதிர்வேல், மாவட்ட துணைத்தலைவர்கள் கண்ணன், பாலம்மாள், மாவட்டக் குழு முனியசாமி முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., மாவட்டச் செயலாளர் பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன், விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் ஜீவா பேசினர்.ஆர்.எஸ்.மங்கலத்தில் வீடில்லாத தொழிலாளர்களுக்கு 12 ஆண்டாக மனு கொடுத்தும் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படாமல் உள்ளதால் உடனடியாக வழங்க வேண்டும். 2023--24 ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட வேண்டும்.உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து நல வாரியத்தை அமல்படுத்த வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகைகள் அனைத்தும் ஜூன் 23 முதல் நிறுத்தப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ