மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
15 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
15 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
15 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
15 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் அறுவடைக்கு பின் சிறு தானியங்களை சாகுபடி செய்ய வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். இதில் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கர மணியன் பொது மக்களிடம் வேளாண் துறை சார்ந்த திட்டங்களை விளக்கினார்.நெல் அறுவடைக்கு பின்பு சிறு தானியங்களான பயறு வகைகள், எள் மற்றும் கோடை கால பயறு வகைகளை விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என்றார். வேளாண் உதவி இயக்குனர் ராஜலட்சுமி பேசுகையில், விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய வலியுறுத்தினார். பின்பு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் கைத்தெளிப்பான் மற்றும் பயறு விதைகள் வேளாண் இடு பொருள்களை துணை இயக்குனர் பாஸ்கர மணியன் வழங்கினார். வேளாண் உதவி அலுவலர்கள் பவித்ரா, ரிஷி, உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆனந்த் பங்கேற்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago