மேலும் செய்திகள்
ஆந்திர நாவல் பழம் கிலோ ரூ.300க்கு விற்பனை
05-Jun-2025
திருப்புல்லாணி: திருப்புல்லாணி சுற்றுவட்டார பகுதிகளில் ஆந்திர நாவல் பழம் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சீசன் இல்லாத நிலையில் ஆந்திரா குண்டூர் பகுதியில் இருந்து மதுரை வழியாக வரும் நாவல் பழம் கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது.நாட்டு நாவல் பழத்தைப் போல துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவை இல்லாமல் முற்றிலும் இனிப்பு சுவை கொண்டதாகவே உள்ளது. ஆக., மற்றும் செப்., மாதங்களில் திருப்புல்லாணி, ரெகுநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு நாட்டு நாவல் பழங்கள் கிடைக்கும் என பழ வியாபாரி ரவி தெரிவித்தார்.
05-Jun-2025