உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேலமுந்தலில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

மேலமுந்தலில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

சாயல்குடி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக மேலமுந்தல் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறக்கப்பட்டது.சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சி மேலமுந்தலில் சேதமடைந்த நிலையில் அங்கன்வாடி மையம் இருந்தது. குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் தயங்கினர். தனியார் வாடகை கட்டத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டது. புதிய கட்டடம் கட்டப்பட்டும் திறக்கப்படாமல் இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக மேலமுந்தல் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த அங்கன் வாடி கட்டடத்தில் 20 குழந்தைகள் மற்றும் சமையலர், சத்துணவு பொறுப்பாளர் உள்ளிட்டோர் உள்ளனர். செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ