அண்ணாதுரையின் கொடி பறந்த இயக்கம் காவியாக மாறுகிறது; அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
பரமக்குடி; அண்ணாதுரையின் கொடி பறந்த இயக்கம் தற்போது காவியாக மாறி வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பல்வேறு மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க., வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி எந்த வழிமுறையில், எந்த பாரம்பரியத்தில் வந்தோம் என்பதை முற்றிலுமாக மறந்து விட்டார். அ.தி.மு.க., கட்சி பா.ஜ., வின் அடிமையாக மாறிவிட்டது. மேலும் பா.ஜ., வில் இருந்து பிரிந்ததாக நாடகமாடி மீண்டும் இணைந்துள்ளனர். மறைந்த எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., கட்டிக் காத்து திராவிட வழியில் இயக்கத்தை மத்திய அரசிடம் அடி பணியாமல் வைத்திருந்தனர். தற்போது அ.தி.மு.க., இருக்கும் சுவடு தெரியாத அளவில் 50 ஆண்டு கால இயக்கத்தை தமிழகத்தில் பலமுறை ஆட்சி செய்த இயக்கத்தை, அண்ணாவின் கொடி பறந்த கட்சியை மொத்தமாக காவியாக மாற்றி உள்ளனர் என்றார்.