மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
முத்துகுளத்துார், -முத்துகுளத்துார் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 34ம் ஆண்டு விழா நடந்தது. இதனை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள், பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி நடந்தது.பள்ளி தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வயணப் பெருமாள், தாளாளர் ரவீந்திரன், பொருளாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தனர்.முதல்வர் பிரேமலதா வரவேற்றார். விளையாட்டு போட்டிகள், பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நல்லாசிரியர் துரைப் பாண்டியன், வழக்கறிஞர் பாண்டிகுமார் பரிசு வழங்கினர். தினமலர் பட்டம் நாளிதழ் சார்பில் வினாடி - வினா விருது போட்டியில் வென்ற மாணவர்கள் மஹா பிரதியனுரா, அக்சயா ஆகியோரை பாராட்டினார்.விழாவில் ஹிந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்வி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கீழக்கரை: ஏர்வாடியில் உள்ள எலைட் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி துறைத் தலைவர் அகமது உசேன் ஆசிப் தலைமை வகித்தார்.எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி செய்யது அப்பாஸ் இப்ராகிம் முன்னிலை வகித்தார். தாளாளர் முகமது அலி ஜின்னா வரவேற்றார்.தமிழக அரசின் ராமநாதபுரம் மாவட்ட காஜியார் வி.வி.ஏ. சலாஹுதீன், முதன்மை முதல்வர் சேக் மஜித் பங்கேற்றனர். பள்ளிமுதல்வர் வசந்தி ஆண்டறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago