உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக விழா

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரத்தில் உள்ள தேவி முத்து நாச்சியம்மன் கோயிலில் 61ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து ஆக., 30ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. செப்., 8ல் கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாக வேள்வி நடந்தது. நேற்று முன்தினம் விநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குடம் எடுத்து வந்து முலவர் தேவி முத்து நாச்சியம்மனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ