உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கவுதமியிடம் நில மோசடி மேலும் ஒருவர் சிக்கினார் 

கவுதமியிடம் நில மோசடி மேலும் ஒருவர் சிக்கினார் 

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே நடிகை கவுதமிக்கு, 150 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக, காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன், 3.16 கோடி ரூபாய் பெற்றார். அதில், 'பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா லிமிடெட்' என்ற நிறுவனம் மோசடி செய்தது.இதுகுறித்த வழக்கில், அழகப்பன், நில புரோக்கர்நெல்லியான், பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் உட்பட 12 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.அழகப்பனின் மேலாளர் ரமேஷ்சங்கர் ஷோனாய், 45, சென்னை எழும்பூரில் ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும், அவரை 15 நாள் சிறையில் அடைக்க ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ