உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப்பணி பெற்றவர்களுக்கு பாராட்டு 

அரசுப்பணி பெற்றவர்களுக்கு பாராட்டு 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி பெற்று அரசுப் பணி பெற்றவர்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டினார்.சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான முடிவுகளில் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்ற 14 பேருக்கு அரசுப்பணி கிடைத்துள்ளது.இவர்களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மதுக்குமார்,அருண்நேரு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை