உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கலை இலக்கியக் கழக விழா

கலை இலக்கியக் கழக விழா

ராமநாதபுரம்; -ராமநாதபுரம் மாவட்ட கலை இலக்கியக் கழகம் சார்பில், இலக்கிய விழா நடந்தது.கழகத் தலைவர் க.சுப்பையா தலைமை வகித்தார். இசையாசிரியை நாகேசுவரியின் இறைவாழ்த்து பாடினார். மன்றத்தின் தலைவர் சவுந்திரபாண்டியன், ராமநாதபுரம் தமிழ்சங்கத்தின் துணைத்தலைவர் விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். கவிஞர் மாணிக்கவாசகம், கலைஇலக்கியக் கழகத்தின் பொது செயலாளர் அப்துல்மாலிக் நாகரிகவளர்ச்சியும் மனிதமும் என்ற தலைப்பில் பேசினார். பாரதியின் நாட்டுப்பற்று குறித்து பாலமுருகன், இஸ்லாமியர்களின் இலக்கியசேவை குறித்து கவிஞர் குரா பேசினர்.பாரதி வழியில் மகளிர் முன்னேற்றம் குறித்து இளமதி, பெருந்தலைவர் காமராஜரும் நானும், என தஸ்லிம் காஜா ஆகியோர் பேசினர். பொருளாளர் காளீஸ்வரி, துணைத்தலைவர் பெருமாள், துணைச்செயலாளர் வையச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி