உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்துார : முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை பேராசிரியர் பாலமுருகன் வரவேற்றார். இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன் மது, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தீங்குகள் குறித்தும், வீடுகளில் பெற்றோர், உறவினர்கள் யாரேனும் மது அருந்தினால் அவர்களை தடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.முகாமில் மாணவர்கள்,பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் கோபி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ