உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே நல்லுார் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடை உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். கால்நடை டாக்டர்கள் ரவிச்சந்திரன், திருச்செல்வி முன்னிலை வகித்தனர். முகாமில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் 56 வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. நாய் வளர்ப்பது மற்றும் பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் மூலம் 32 பேர் பயனடைந்தனர். கால்நடை ஆய்வாளர் வீரன் உட்பட கிராமமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !