உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

தொண்டி : பாசிபட்டினத்தில் ராமநாதபுரம் வடக்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்டத் தலைவர் ரகுமான் அலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அல்பார் அமீன், துணைத் தலைவர் அபுதாகிர், துணைச் செயலாளர் அஜ்மத் உட்பட பலர் கலந்து கொண்டனர். போதையால் பாதை மாறும் சமுதாயம் குறித்து மாநில செயலாளர் தாவூத் கைசர் பேசினார். இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை