உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி விளையாட்டு, ஆண்டு விழா

ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி விளையாட்டு, ஆண்டு விழா

பரமக்குடி : பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 40 வது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது.ஆயிர வைசிய சபை மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் போஸ் தலைமை வகித்தார். இணைத் தலைவர் பாலுச்சாமி முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜேஷ் கண்ணன், இணைச் செயலாளர்கள் பி.பிரசன்னா, ஆர்.பிரசன்னா வாழ்த்தினர். சபை செயலாளர் செல்வராஜ் தேசியக் கொடி, மேல்நிலைப்பள்ளி செயலாளர் லெனின் குமார் ஒலிம்பிக் கொடி, சபை பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார்கள். முதல்வர் ஜெய பிரமிளா வரவேற்றார்.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவஸ்தான டிரஸ்டிகள் பாலசுப்பிரமணியன், ஜெயராமன், ரவீந்திரன் பரிசுகளை வழங்கினர். உடற்கல்வி இயக்குனர் சரவணக்குமார், ஆசிரியர்கள் கோபிநாத், பவானி ஒருங்கிணைத்தனர். துணை முதல்வர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.*பள்ளியின் 40 வது ஆண்டு விழாவில் காரைக்குடி ஆயிர வைசிய இளைஞர் சமூக நல சங்க தலைவர் நடராஜன், ராமநாதபுரம் ஆயிரவைசிய மகா ஜன சபை தலைவர் ஜெயராமன் கலந்து கொண்டனர். சபை, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிர்வாக மேலாளர் சதீஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை