கல்லுாரி முதல்வருக்கு சிறந்த ஆசிரியர் விருது
கீழக்கரை : -கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூத், கல்வித்துறையில் செய்த சாதனை மற்றும் பங்களிப்பிற்காக இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) தமிழ்நாடு மாநில மையம் 2025 ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது சென்னையில் நடந்த 58 வது பொறியாளர் தின விழாவில் வழங்கப்பட்டது. தமிழக இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி விருது வழங்கிய கவுரவித்தார். முதல்வர் சேக் தாவூத் கடந்த 35 ஆண்டுகளாக கல்வித் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள், ஆராய்ச்சி, சமூக சேவையில் பங்காற்றியது மற்றும் 20 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தந்தது போன்ற செயல்பாடுகளுக்காக விருது வழங்கப்பட்டது. முதல்வர் சேக் தாவூத்தை, முகமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப், செய்லர் ஷர்மிளா, செயல் இயக்குநர் ஹமீது இப்ராகிம், இயக்குநர்கள் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, அப்துல் காதர் ஆகியோர் பாராட்டினர்.