மேலும் செய்திகள்
அர்ச்சுனன் - திரவுபதி திருக்கல்யாணம்
01-Apr-2025
திருவாடானை : திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் விழா மார்ச் 26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று பீமன் வேடம் ஊர்வலம் நடந்தது.வேப்பிலை கட்டி உடலில் வர்ணம் பூசி ஆட்டம், பாட்டத்துடன் பஞ்சபாண்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் விதமாக நடனமாடியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற பீமனுக்கு இனிப்பு பச்சரிசி, பால், பழம் கொடுத்து மக்கள் வரவேற்றனர். நாளை (ஏப்.,1) திருவிளக்குபூஜை, ஏப்.2ல் காளிவேடம், மறுநாள் திரவுபதை அம்மன் வேடம், ஏப்.4 ல் மகாபாரதம் கலைநிகழ்ச்சி, அன்று இரவு பூக்குழி இறங்குதல், மறுநாள் கொடியிறக்கம் நடைபெற உள்ளது.
01-Apr-2025