உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தீவுப்பகுதி, சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

 தீவுப்பகுதி, சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா தீவுப்பகுதிகள், சரணாலயங்கள் உட்பட 29 இடங்களில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி இரண்டு நாட்கள் நடந்தது. வனத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. பொதுவாக பறவைகள் வலசை வரும் காலம் அக்டோபரில் ஆரம்பித்து ஏப்ரல் வரை நீடிக்கும் என்பதால் நீர் நிலைகள் கணக்கெடுப்பு பணி டிச.,ல் நடத்தபடுகிறது. இப் பணி ராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் அகில்தம்பி தலைமையில் டிச., 27, 28ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்தது. இதில் 29 இடங்கள் தேர்வு செய்யபட்டன. தேர்த்தங்கல், சக்கரகோட்டை, காஞ்சிராங்குளம், சித்திரங்குடி, மேலகீழசெல்வனுார், வாலிநோக்கம், தலையாரிதீவு, வாலைதீவு, குருசடைதீவு, சிங்கில்தீவு, மணலிதீவு, நதிபாலம், புதுமடம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, சோலியக்குடி, காரங்காடு, திருப்பாலைக்குடி உள்ளிட்ட 29 இடங்களில் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: பறவைகளின் எண்ணிக்கை, இனபெருக்கத்தை கண்காணிப்பதற்காக கணக்கெடுப்பு பணி நடத்தபடுகிறது. முதல் கட்டமாக உள்நாட்டு பறவைகள், கடலோர ஈரநிலங்களில் வசிக்கும் பறவைகள், 2ம் கட்டமாக நிலப்பரப்பில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு நடத்தபட்டது. வழக்கத்தை விட தற்போது பறவைகள் அதிகளவில் வந்துள்ளன, புள்ளி விபரம் விரைவில் வெளியிடப்படும். இப்பணியில் தன்னார்வலர்கள், மாணவர்கள், தொழில்துறை புகைபட கலைஞர்கள் பங்கேற்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை