உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொங்கல் விழாவில் மாட்டுவண்டி பந்தயம்

பொங்கல் விழாவில் மாட்டுவண்டி பந்தயம்

கமுதி: கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் குருநாத சுவாமி குருபூஜை விழா, பெரிய நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.சின்னமாடு, பெரிய மாடு, பூஞ்சிட்டு,தேன் சிட்டு என 4 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இதில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 53 இரட்டை மாட்டு வண்டிகள் மற்றும் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதல் நான்கு இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்க பணம், குத்துவிளக்கு,நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ