உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏலமிடலாமே[ துருப்பிடித்து வீணாகும் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள்

ஏலமிடலாமே[ துருப்பிடித்து வீணாகும் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மீன்வளத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் ஏராளமான கழிவு செய்யப்பட்ட ஜீப், கார் உள்ளிட்ட பழைய அரசு வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு வெயில், மழையில் துருப்பிடித்து வீணாகின்றன. இவற்றை ஏலமிடாமல் அப்படியே விட்டுள்ளனர். அரசுத்துறைகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு ஜீப், கார் போன்ற வாகனங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வாகனங்கள் பெயரளவிலான பராமரிப்பு காரணமாக அடிக்கடி பழுதாகி விடுகின்றன. மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டால் அந்த வாகனங்களை தொடர்ந்து இயக்காமல் அவர்களது அலுவலக வளாகத்தில் அப்படியே நிறுத்தி வைக்கின்றனர். குறிப்பாக கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், மீன்வளத்துறை, மகளிர் திட்டம் வளாகம், கிராமப்புற குடிநீர் வாரிய அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் பயன்பாடு இல்லாத வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இவை மழையில் நனைந்து துருப்பிடித்த நிலையில் செடி, கொடிகள் படர்ந்து புதர் மண்டி காணப்படுகின்றன. சில வாகனங்கள் பாம்பு, விஷபூச்சிகள் தங்கும் இடமாக மாறியுள்ளன. இவற்றின் உதிரி பாகங்களை சிலர் திருடி செல்லவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பயன்பாடில்லாமல் பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள பழைய வாகனங்களை கணக்கெடுப்பு செய்து அவற்றை முறையாக ஏலம் விட்டு அரசு கணக்கில் சேர்க்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ