சிறுவனை தாக்கியவர்கள் மீது வழக்கு: எஸ்.ஐ.,க்கு மிரட்டல்
திருவாடானை : சிறுவனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டதால், அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து எஸ்.ஐ.யை மிரட்டிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.தொண்டி அருகே நம்புதாளை மேற்குதெருவை சேர்ந்தவர் முகமதுஅபுபக்கர் 26. அதே தெருவை சேர்ந்தவர் மிர்சான்அலி 38. இருவரும் நெருங்கிய நண்பர்கள். மிர்சான்அலி மனைவி செய்யது அலிபாத்திமா 34. விற்கும், முகமது அபுபக்கருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த மிர்சான்அலி ஜூன் 30ல் இரவு ஆட்டுக்கல்லை துாக்கி தலையில் போட்டு முகமது அபுபக்கரை கொலை செய்தார். அவரை தொண்டி போலீசார் கைது செய்தனர். அதே கிராமத்தை சேர்ந்த செய்யதுஅபுதாகிர் மகன் 16 வயது சிறுவனை, முகமது அபுபக்கர் உறவினர்கள் முகமது இஸ்மாயில் 30, தப்பீர்ஸ் 22, ஜாவிட், சிராஜூதீன் 55, ஆகியோர் சேர்ந்து தாக்கினர். இதுகுறித்து சிறுவனின் தாய் ஹாஜர்நிஷா 42, புகாரில் தொண்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இதை அறிந்த நான்கு பேரும் தொண்டி போலீஸ்ஸ்டேஷனுக்குள் நுழைந்து அங்கிருந்த எஸ்.ஐ. விஷ்ணு மற்றும் போலீசார்களை தரக்குறைவாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தனர். இது குறித்து ஏட்டு பிரபாகரன் புகாரில் முகமதுஇஸ்மாயில், தப்பீர்ஸ், ஜாவிட், சிராஜூதீன், பல்கிஸ்பானு ஆகியோர் மீது தொண்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.