உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஓராண்டுக்கும் மேலாக குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்

 ஓராண்டுக்கும் மேலாக குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கருங்காலக்குறிச்சி கிராமத்தில் ஓராண்டுக்கும் மேலாக காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. கருங்காலக்குறிச்சி கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள தெருக்களில் ரோட்டோரத்தில் குழாய் பதிக்கப்பட்டு வீடுகளுக்கு காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இருந்த போதிலும் வீடுகளுக்கு குடிநீர் செல்வதால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஒருசில நேரங்களில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தேங்கி இருக்கும் தண்ணீர் மறுபடியும் குழாயில் சென்று கலங்கலாக குடிநீர் வருகிறது. இதை பயன்படுத்தினால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. குழாய் உடைப்பால் ரோடு சேதமடைந்து சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்து ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ