உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் ஆர்ப்பாட்டம்

மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள்சங்கம் சார்பில் வங்கி அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மத்திய கூட்டுறவுவங்கி பணியாளர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும். பிற பொதுப்பணித்துறைக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.கூட்டுறவுத்துறைக்கு 10 சதவீதம் தான் வழங்கியுள்ளனர். மீதி 10 சதவீதத்தை வழங்க வேண்டும். ஏற்கனவே பெற்று வரும் உரிமைகள், சலுகைகள்தொடரும் என ஊதிய உயர்வு சுற்றறிக்கையில் இடம்பெற வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி