உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா பூச்சொரிதல் கோலாகலம்

சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா பூச்சொரிதல் கோலாகலம்

பரமக்குடி: -பரமக்குடி சந்தன மாரியம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோயிலில் 61வது ஆண்டு பங்குனி பொங்கல்விழா நடக்கிறது.இங்கு நேற்று மாலை பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மன் சூலம் ஏந்தி அமர்ந்த திருக்கோலத்தில் வீதி வலம் வந்தார். அப்போது பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்தனர்.பின்னர் இரவு 8:00 மணிக்கு மூலவருக்கு வண்ண மலர்களால் அபிஷேகம் செய்து, தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பூக்கள் பிரசாதமாகவழங்கப்பட்டன.மார்ச் 19ல் காப்பு கட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது. தினமும் காலையில் அபிஷேகங்களும், இரவு 8:30 மணிக்கு தீபாராதனைகள் நடக்கிறது. மார்ச் 26 அக்னிசட்டி, பொங்கல் விழா மற்றும் இரவு அம்மன் கரகம் எடுக்கப்படும். மார்ச் 29 பால்குடம் மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை திருவிளக்கு பூஜை, புஷ்ப அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை