மேலும் செய்திகள்
சட்ட சேவை முகாம்
26-Nov-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் முதுகுளத்துார் வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் தலைமை வகித்தார். சார்பு நீதிபதிகள் வேலுச்சாமி, பாஸ்கர், மாவட்ட உரிமையியல் நீதித்துறை நீதிபதி தங்க கார்த்திகா, மாவட்ட உரிமையியல் நீதிபதி அபர்ணா, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராய ணன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் மரக்கன்று நட்டு பேசினார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகர், முதல்வர் மணிமாறன், பங்கேற்றனர்.
26-Nov-2025