உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துாரில் நாய் கடித்து குழந்தை காயம்

முதுகுளத்துாரில் நாய் கடித்து குழந்தை காயம்

முதுகுளத்துார் : ராமநாதபுரம்மாவட்டம் முதுகுளத்துார் பேரூராட்சி 15 வார்டுகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு கூட்டமாக நாய் உலா வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர். முதுகுளத்துார் திடல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அசரப்அலி மகன் அப்துல் வாஹித் 2. நேற்று காலை 10:30 மணிக்கு பள்ளிவாசல் அருகே நடந்து சென்றார். அப்போது நாய் கடித்ததில் குழந்தை சத்தமிட்டதால் அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டினர். காயமடைந்த அப்துல் வாஹித் முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய் பாதிக்கப்பட்டு தோல் உரிந்த நிலையில் நாய் உலா வருகின்றன. இதில் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை