குழந்தைகள் மையம்; பள்ளம் சீரமைப்பு
பரமக்குடி; பரமக்குடியில் உள்ள காட்டுப்பரமக்குடி குழந்தைகள் மையம் வாசலில் ஏற்பட்ட பள்ளம் குறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டிய நிலையில் சீரமைக்கப்பட்டது.காட்டுப்பரமக்குடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் 85-வது மையம் செயல்படுகிறது. இங்கு 2 முதல் 5 வயது குழந்தைகள் படிக்கின்றனர்.குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுவதுடன், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், வளர்இளம் பெண்களும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் மையத்தின் வாசலில் கடந்த மாதம் திடீரென ஒரு அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது.இது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக பள்ளத்தை சீரமைத்து தளம் அமைக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள கழிப்பறை சீரமைக்கப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.