மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
3 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
3 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
3 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
3 hour(s) ago
ராமநாதபுரம், : ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் நவபாஷாண கடற்கரை பகுதியில் கழிவுநீர் தேங்கி குப்பை குவிந்துள்ளது. நவக்கிரகங்களை வழிபட வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடற்கரை பகுதியை சுத்தம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆன்மிக தலங்கள் உள்ளன. குறிப்பாக ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,ல் உள்ள தேவிப்பட்டினம் கடலில் ஸ்ரீ ராமர் வழிப்பட்ட நவபாஷாணத்தினாலான நவக்கிரக சிலைகள் உள்ளன. இக்கோயில் தமிழகத்தில் உள்ள நவக்கிரக பரிகார வழிபாடு தலங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கு முன்ஜென்ம பாவங்கள் தீரவும், பிதுர்கடன் கழிக்கவும், தர்ப்பணம் செய்யவும், திருமண தடை, தோஷ நிவர்த்தி உள்ளிட்ட பரிகார பூஜைகள் செய்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த நவபாஷாண கடற்கரை பகுதியை பராமரிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் குப்பை குவிந்து கழிவுநீர் கடலில் கலப்பதால் அப்பகுதி முழுவதும் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடல்வளம் பாதிக்கப்படுவதுடன் பக்தர்களுக்கு நோய்த்தொற்று அபாயம் உள்ளது. எனவே நவபாஷாண கடற்கரையில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி சுத்தம் செய்யவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago